Wednesday, September 2

Tag: Abarnathi

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மையா?

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மையா?

News
“புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மை” ; ஆணித்தரமாக கூறும் நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி! V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார். குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வரும் சிறூவன் ஒருவன் செஸ் விளையாட்டில் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக விரும்புகிறான். அதற்காக அவன் சந்திக்கும் சவால்களையும், அவனது கனவு நிறைவேறியதா? என்பதையும் சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது. ‘இறுகப்பற்று’ படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்...
பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கவுள்ள ‘Demon’ திரைப்படம்!

பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கவுள்ள ‘Demon’ திரைப்படம்!

News
தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் - அபர்நிதி நடிக்கும் 'Demon' படத்தின் முதல் பார்வை வெளியானது! சஸ்பென்ஸ் - த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் 'Demon' படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர். தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். 'அங்காடித்தெரு', 'அரவான்', 'காவிய தலைவன்', 'ஜெயில்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத...