‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு!
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா -இயக்குநர் வம்சி -அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில், 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக நடித்து வரும் பான் இந்திய திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்தத் திரைப்படத்தை ' அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இவரின் இலட்சிய படைப்பான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் மே 24ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்.
முதன்மையான கதாபாத்திரத்தில் இதுவரை கண்டிராத முரட்டுத்தனமான தோற்றத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா தோன்றுகிறார். இப்படத்த...
