பேட்டைகாளி இயக்குனர் ல.ராஜ்குமாரின் நடிப்பு பயிற்சிப் பட்டறை
நடிப்பு கலைய கற்றுக் கொள்ள விருப்பப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு..ஆஹா ஓடிடியில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பேட்டைக்காளி வெப் சீரிஸை தயாரித்த முத்தமிழ் கலைகூடம் நிறுவனம், ஒரு நடிப்பு பயிற்சிப் பட்டறையை தொடங்குகிறார்கள். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், நடிகர்களை வைத்து நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறையில் பாரம்பரியமான நடிப்பு கலையை கற்றுத் தரும் பாடத்திட்டங்கள் வகுத்திருக்கிறார்கள். மேடை பயத்திலிருந்து வெளி வருவது, உணர்வுகள் வெளிப்படுத்தும் முறை, உடல் மொழி,பாவனைகள் - இப்படி நடிகருக்கு தேவையான எல்லா வழிமுறைகளையும் நுட்பமாக அணுகுகிறார்கள்.. மேலும், பயிற்சி பட்டறையின் இறுதியில் முன்னணி இயக்குனர்கள் முன்னிலையில் அரங்கேற்றமும் நடக்க இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்: 7305652926...
