இயக்குனர் ஜான் மகேந்திரன் பாராட்டும் நடிகர் அருள்தாஸ்!
இந்த கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகள் இயங்காத நிலையில் உலகம் முழுக்க OTT தளங்களில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
அரசு அறிவித்த லாக்டவுன் காலங்களில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான சினிமா விரும்பிகள் உள்ளூர் தொடங்கி உலகத்திரைப்படங்கள் வரை பார்த்துவிட்டு, கையோடு அந்தப் படங்கள் அல்லது வெப் சீரிஸ் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விலாவாரியாக எழுதுவதை முகநூல் முழுக்கப் பார்க்க முடிகிறது.
அதிலும் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தாங்கள் பார்த்த படத்தின் கதை பற்றியும், அதன் களம், கதாபாத்திரங்கள் என்று மிக நுட்பமாக சொல்லுவதில் பலரது கவனத்தையும் ஈர்ப்பவர் இயக்குனர் ஜான் மகேந்திரன். இவரது விமர்சனத்தைப் படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு எந்த மொழிப்படமாக இருந்தாலும் சப் டைட்டில் இல்லாமலே படம் பார்க்...
