Friday, May 1

Tag: actor jiiva

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு!

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு!

News
நடிகர் ஜீவாவின் 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் வெளியீடு: இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது. இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று  21 வருடங்களை நிறைவு செய்கிறார்.  வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.  அவரது  ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’  ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கும் நிகழ்ச்சி, ஊடகங்கள் மற்றும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ்,ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால்,மிர்ச்சி சிவா,விச்சு விஸ்வநாத்,விவேக் பிரசன்னா, கலையரசன்,ஆதவ் கண்ணதாசன், ஜெகன்,இயக்குனர் மோகன்.G , நடிகர்  மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆ...
விளையாட்டு நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜீவா!

விளையாட்டு நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜீவா!

News
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்... ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது. இந்த விளையாட...

ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”!

News
Super Good Films RB சௌத்திரி வழங்கும், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” நடிகர் ஜீவாவும் அவரின் ரோம்-காம் படங்களும் பிரிக்க முடியாதவை. திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தில் ரோம்-காம் படங்களுக்கென்று ஒரு தனித்துவமான இடமுண்டு. 'சிவா மனசுல சக்தி' போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் தாண்டி இன்னும் எண்ணற்ற திரைப்படங்கள் நீளும் இந்த வரிசையில், தற்போது ஜீவா மீண்டும் 'வரலாறு முக்கியம்' என்ற ரோம்-காம் படம் மூலம் ரசிகர் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்திரி தயாரிக்கிறார். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், ச...
கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்தாக நடிக்கும் ஜீவா !

கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்தாக நடிக்கும் ஜீவா !

News
கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. இங்கே கிரிக்கெட் வீரர்கள் இளைஞர்கள் பலரின் ஆதர்ஷம். கிரிக்கெட்டை இளைஞர்களிடம் சிறுவர்களிடம் கொண்டு போவதில் பல முன்னணி வீரர்கள் இந்தியாவின் அடையாளமாய் இருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு ஒரு அடையாளமாய் இங்கே கிரிக்கெட்டை பரப்பிய ஆளுமைகளுல்  கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மிக முக்கியமானவர். தனது தனித்த திறமையாலும், ஸ்டைலான ஆட்டத்தாலும் பலரையும் கவர்ந்தவர். 1983 உலககோப்பை வாங்கிய அணியில் பெரும் பங்கு வகித்தவர். இப்போது இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, உலககோப்பை வென்ற கதை...
விஜய் சேதுபதி வெளியிட்ட “சீறு” படத்தின் first look!

விஜய் சேதுபதி வெளியிட்ட “சீறு” படத்தின் first look!

News
வெகு சில நடிகர்களே எல்லா வகையான கதாபாத்திரங்களை ஏற்று பெயரையும் புகழையும் ஈட்டிக் கொள்வர். அந்த வரிசையில் முதன்மையான நடிகர் ஒருவர் என்றால் " ஜீவா" என்றால் மிகை ஆகாது.  இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் , வேல்ஸ் பிலிம் international சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், உருவாகும் "சீறு" ஜீவாவின் நடிப்பு திறமைக்கு ஏற்ப அமைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. ஒரு மாஸ் நடிகராக ஜீவா அவதரிக்கும் இந்தப் படம் ஜீவாவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.  அக்டோபர் மாதம் வெளி வர உள்ள "சீறு" படத்தில் ஜீவாவுக்கு இணையாக புதுமுகம் ரியா சுமன் நடிக்க,  நவதீப் வில்லனாக நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில், கே சம்பத் திலக் கலை வண்ணத்தில், கே கணேஷ் குமார் சண்டை காட்சி அமைக்க, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, வ...
அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!

அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!

News
குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது, "இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் த...
“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு!

“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு!

News
எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.  இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன்...