Friday, October 23

Tag: actor nagesh

புத்தகங்களாக உருவான நடிகர் நாகேஷ், ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை அனுபவங்கள்!

புத்தகங்களாக உருவான நடிகர் நாகேஷ், ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை அனுபவங்கள்!

News
தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நாகேஷ். தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். இந்த இருபெரும் சாதனையாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி தொகுத்து புத்தகங்களாக எழுதி இருக்கிறார். ‘நான் நாகேஷ்’, ‘திரைக் கடலோடி’ என்ற தலைப்பிலான இரு புத்தகங்களையும் பிரபல நடிகர் சிவகுமார் வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதிகளை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகனும், பிரபல திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலருமான டயமண்ட் பாபு பெற்றுக் கொண்டார். புத்தகங்களை வெளியிட்ட நடிகர் சிவகுமார், “நாகேஷ் ஒரு அபாரமான நடிகர். என் நெருங்கிய நண்பர். ஃபிலிம்நியூஸ் ஆனந்தன், தமிழ்த் திரையுலகின் நடமாடும் என்சைக்கிளோபீடியாவாக திகழ்ந்தவர். தமிழ் சினிமா உலகத்துக்கு இருவரது பங்களிப்பும் மகத்தானது. சுவாரஸ்யம் மிகுந்த அவர்க...