‘கைதி’ படம் வெளியீடு குறித்து கொண்டாட்ட மனநிலையில் கார்த்தி ரசிகர்கள்!
கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.
அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அவருடன் ஒரு சிறு நேர் காணல்...
தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ?
தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் யூ டர்ன். அதற்குப்பிறகு அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்துல ஒரு கேரக்டர் நடிச்சுருக்கேன். ஃபிளாஷ்பேக்ல ஹீரோ மாதிரி ரத்தினம்னு ஒரு கேரக்டர். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன் இரண்டும் ரெடியாகிட்டு இருக்கு. இது போன வருஷத்துல பண்ணினது. எனக்கே ஆச்சர்யம் கைதி தான் பெரிய படம். ...
