Sunday, September 20

Tag: Actor Natty

நடிகர் நட்டி இரு வேடங்களில் நடிக்கும் ‘ஆண்டவன் அவதாரம்’!

நடிகர் நட்டி இரு வேடங்களில் நடிக்கும் ‘ஆண்டவன் அவதாரம்’!

News
நடிகர் நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது! நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். அடுத்ததாக தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து, படத்திற்கு படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் நட்டி நட்ராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக அதிலும் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நடிகர் ராகவ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி மற்றும் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு இன்னொரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் (அக்-9) இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து செ...
ஜீவன் – நட்டி இணைந்து கலக்கும் “சிக்னேச்சர்”.

ஜீவன் – நட்டி இணைந்து கலக்கும் “சிக்னேச்சர்”.

News
ஜீவன் - நட்டி இணைந்து கலக்கும் புதிய படம் ' எம்.எஸ். முருகராஜ் தயாரிக்கும் "சிக்னேச்சர்". “யாயா” படத்தை தொடர்ந்து நல்ல விமர்சனங்களை கொடுத்த படம் “பக்ரீத்”. இப் படத்தை "M10 PRODUCTIONS" சார்பில் தயாரித்த M.S.முருகராஜ் தயாரிக்கும் மூன்றாவது பிரமாண்ட படத்திற்கு "சிக்னேச்சர்" என்று பெயரிட்டுள்ளார். நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறது தான் இந்த “சிக்னேச்சர்”. சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டா வை திருடும் கேரக்டரில் “திருட்டுப்பயலே” ஜீவன் நடிக்கிறார். அதே டேட்டா வை பயன்படுத்தி மக்களை வேட்டையாடு பவராக, “சதுரங்கவேட்டை” நட்டி நடிக்கிறார். இவர்கள் இணைந்து செய்யும் 'சீட்டிங்' தான் படத்தின் திரைக்கதை சுவாரசியம். இவர்களுடன் இளவரசு, ஹரிஷ் பெராடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்க...