‘கல்கி 2898 AD’ படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துரைத்த இயக்குநர் நாக் அஸ்வின்!
கல்கி 2898 AD@டெக்ஃபெஸ்ட்: ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது 'டார்லிங்' பிரபாஸை அழைத்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குநர் நாக் அஸ்வின்..!
மும்பையில் உள்ள ஐ ஐ டி வளாகத்தில் 'டெக்ஃபெஸ்ட்' ( Tech Fest) எனும் பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. இவ்விழாவில் 'கல்கி 2898 AD' படத்தின் இயக்குநரான நாக் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, திரையுலகில் 'டார்லிங்' என அன்புடன் அழைக்கப்படும் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். பிரபாஸின் குரலை தொலைபேசி மூலம் கேட்டபோது, அங்கு கூடி இருந்த மாணவர்கள் உற்சாகமாய் குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸை மாணவர்களிடம் உரையாட வைத்தார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். மாணவர்கள் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளி...


