“என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்” – நடிகர் ஆர்கே திட்டவட்டம்!
தமிழ் திரையுலகை பொறுத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே.
எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்ல அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் அறிமுகமானார் ஆர்கே. தொடர்ந்து என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்த படங்களிலும் தனது திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நடிகர் ஆர்கே.
ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் உண்டு. வழக்கமான ஒரு பிசினஸ்மேன் ஆக இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க்க புதுவிதமான கண்டுபிடிப்புகளை பல்வேறு ஆய்வுகளுக்கு இடையே கண்டுபிடித்து பல்வேறு தர சோதனைகளுக்கு ...

