பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் ரா ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம்!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக சற்று வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் ஷாம். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் ஷாம். குறிப்பாக இப்படத்தில் இதுவரை தான் ஏற்று நடித்திராத ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாம்.
கடந்த 20 நாட்களாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம்...

