Friday, October 2

Tag: actor sriram

கமல் வழியில் அவரது ரசிகன் ஸ்ரீராம்!

கமல் வழியில் அவரது ரசிகன் ஸ்ரீராம்!

News
குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்றது , சிறுவயதிலேயே தேசிய விருது வாங்கியது, மலையாளத்தில் முதல் படத்திலேயே நேரடி கதாநாயகன் ஆனது இப்படிப்பட்ட பெருமைகள் உலகநாயகன் கமல்ஹாசனின் வாழ்க்கையில்தான் வாய்த்துள்ளன. அவரது பரம ரசிகனான ஒரு நடிகருக்கும் அதே பெருமை வந்துள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள். அந்த நடிகர் தான் ஸ்ரீராம். இவரும் 'பசங்க 'படத்தின் மூலம் 2009-ல் தேசிய விருதை வென்றார். அண்மையில் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'நவரசா' படத்தில் இடம்பெறும் 'ரௌத்திரம் ' நாயகனாக முத்திரை பதித்தார்.அந்த ஸ்ரீராம் மலையாளத்தில் இப்போது நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு இப்படி மலையாளத்தில் நேரடி கதாநாயகனாக அறிமுகமானவர் கமல்ஹாசன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அபிமான நட்சத்திரத்தின் அடிச்சுவட்டில் பயணம் செய்வதில் பெருமைப்படுகிறார் ஸ்ரீராம். ப்ளூம் இண்டர்நேஷனல்...