Thursday, September 24

Tag: actor vemal

விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி ...
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ்!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ்!

News
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது! நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்...
விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2”.

விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2”.

News
விஜய், அஜித் பட டைரக்டர் S.எழிலின் அடுத்த படைப்பு!* விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில். குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல்.. அதிரும் காமடி.. ஆக்‌ஷன்.. செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அப்படிபட்ட படமாக ஹிட் அடித்த படம்தான் “தேசிங்குராஜா”. 10 வருடம் கழித்து மீண்டும் “தேசிங்குராஜா” இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்கிறார் s.எழில். ‘தேசிங்குராஜா’ வில் கதாநாயகனாக நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டு...
விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்த ‘படவா’ திரைப்படம்!

விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்த ‘படவா’ திரைப்படம்!

News
நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள 'படவா' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் 'படவா' திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், 'கேஜிஎஃப்' புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர். சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீ...
நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த தயாரிப்பாளர் சிங்கார வேலன்!

நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த தயாரிப்பாளர் சிங்கார வேலன்!

News
நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த தயாரிப்பாளர் சிங்கார வேலன்! தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் இன்று (22-04-22) காலை 11 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகார் மனு நகலை அளித்தார். அதில், பொருள் : ரூபாய் 1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம். " மெரினா பிக்சர்ஸ் " என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் துவங்கி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான " லிங்கா ", விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான " புறம்போக்கு " உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங...
விமல் மறுப்பு!

விமல் மறுப்பு!

News
என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்....

ஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம்!

News
ஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம்! கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. "1 பந்து 4 ரன் 1 விக்கெட்" பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார்.. இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா. இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது....