“எனக்கான விசிட்டிங் கார்டு தான் குடிமகான்” – நடிகர் விஜய் சிவன்
தமிழ் சினிமாவில் வாரந்தோறும் குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து படங்களாவது வெளியாகின்றன.
இவற்றில் நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய படங்களுடன் சிறிய படங்கள் போட்டியிட்டு தங்களது தனித்தன்மையை நிரூபிப்பது சவாலான விஷயமாகவே இருக்கிறது. எப்போதோ ஒரு பரியேறும் பெருமாள், லவ் டுடே, டாடா போன்ற படங்கள் தங்களை நிரூபித்தாலும் அவற்றின் பின்புலத்தில் உள்ள ஏதோ ஒரு பிரபலம் காரணமாக ரசிகர்களின் பார்வைக்கு மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட்டதால் தான் அவற்றின் தனித்தன்மையும் ரசிகர்களிடம் சென்றடைந்தது.
அதேசமயம் புதிய படைப்பாளிகளின் தயாரிப்பில், இயக்கத்தில் உருவாகி நல்ல கதையம்சத்துடன் வெளியானாலும் தங்களது படைப்பின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னரே வாய்ப்புகள் பறிக்கப்படுவது என்பது ரொம்பவே வேதனையான விஷயம்.
அப்படி கடந்த மாதம் அறிமுக நடிகர், அறிமுக இயக்குநர் என குடும்பப்பாங்கான ஒரு படமாகத்தான் ‘க...
