Friday, September 25

Tag: actor Vikram

துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

News
'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் 'மை நேம் இஸ் ஜான்' பெப்பி பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்! கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்ற பிறகு, படக்குழு அவர்களின் இரண்டாவது சிங்கிளான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' உடன் மீண்டும் வந்துள்ளது. இந்தப் பாடல் ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த பெப்பியான பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர். திறமை மற்றும் துடிப்பான இண்டி ராப்பரும் பாடலாசிரியருமான பால் டப்பா இந்த வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதற்கு முன்பு வெளியாகி ஹிட் ஆன பாடலான 'ஐ...
சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திர...
சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் !

சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் !

News
தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார்.   தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய்...