Tuesday, November 17

Tag: actor Yogi Babu

யோகி பாபு பற்றிய சர்ச்சை கருத்து _ கஜானா தயாரிப்பாளர் சொல்வது என்ன?

யோகி பாபு பற்றிய சர்ச்சை கருத்து _ கஜானா தயாரிப்பாளர் சொல்வது என்ன?

News
யோகி பாபு பற்றிய சர்ச்சை கருத்து! - ‘கஜானா’ பட இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரகதீஸ் சாம்ஸ் வருத்தம் யோகி பாபு எங்கள் படத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் - ‘கஜானா’ திரைப்பட தயாரிப்பாளர் விளக்கம் ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் ’கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜா, பேசும் போது, ”பணம் கொடுத்தால் தான் யோகி பாபு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், என்று கூறுகிறார். இது தவறானது, இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்”, என்று பேசினார். அவர் பேசிய வீடி...
அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’!

அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’!

News
நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ *படப்பிடிப்பு தொய்வின்றி நடைபெறும் நிலையில் மார்ச்சில் நிறைவு செய்து கோடை விடுமுறைக்கு 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை வெளியிட குழுவினர் தீவிரம்* ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய ...
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’!

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’!

News
’பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்திற்காக மூன்று நாயகிகளுடன் ஜோடி போடும் யோகி பாபு! முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் (Working House Productions) நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருக...
யோகிபாபு, லக்‌ஷ்மி மேனன், காளிவெங்கட் நடிக்கும் ‘மலை’!

யோகிபாபு, லக்‌ஷ்மி மேனன், காளிவெங்கட் நடிக்கும் ‘மலை’!

News
புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை அக்டோபர் மாதம் வெளியாகிறது! லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் அக்டோபரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள். மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பி...
கதை நாயகனாக யோகி பாபு நடிக்கும்  ‘கான்ஸ்டபிள் நந்தன்’!

கதை நாயகனாக யோகி பாபு நடிக்கும்  ‘கான்ஸ்டபிள் நந்தன்’!

News
கதையின் நாயகனாக மீண்டும் யோகி பாபு நடிக்க, சங்கர் பிக்சர்ஸ் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்  'கான்ஸ்டபிள் நந்தன்’! இந்தியத் திரையுலகம் பல ஆண்டுகளாக பல நடிகர்கள் நட்சத்திரங்களாக உயரம் அடைவதைப் பார்த்து வருகிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் யோகி பாபு பல தீவிரமான கதைக்களங்களில் கதையின் நாயகனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இப்போது வரவிருக்கும் திரைப்படமான 'கான்ஸ்டபிள் நந்தன்' படத்தில் கான்ஸ்டபிளாக நடிப்பதன் மூலம் ஒரு நடிகராக அடுத்த உயரத்தை எட்ட உள்ளார். இப்படத்தை ஷங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி. ஷங்கர் திருவண்ணாமலை தயாரித்துள்ளார். இயக்குநர்கள் சுந்தர் சி, சசிகுமார், மு. களஞ்சியம் படங்களில் உதவி இயக்க...
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ACKO நிறுவன விளம்பர படங்கள்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ACKO நிறுவன விளம்பர படங்கள்!

News
ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !! ● ACKO விற்காக மூன்று விளம்பர படங்களை, புகழ்பெற்ற தென்னிந்திய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். ● இந்த விளம்பரப் படங்களில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் ராப்பர் இன்ஃப்ளூயன்ஸர் பால் டப்பா ஆகியோர் நடித்துள்ளனர். ● இந்த விளம்பர படங்கள், காப்பீட்டாளரிடம் இருந்து நேரடியாக கார் இன்சூரன்ஸ் வாங்குவதன் நன்மைகள் குறித்து விளக்குகிறது. இந்தியா, ஜூன் 24, 2024: முந்தைய மூன்று ஹைப்பர்லோகல் ஆட்டோ இன்சூரன்ஸ் விளம்பர படங்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, டெக்-முதல் காப்பீட்டு நிறுவனமான ACKO, பார்வையாளர்களுக்கு, உள்ளூர் ரசனையைக் கொண்டு வருவதற்காகச் சென்னையில் ‘ACKO போல வருமா’ என்ற தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. டிடிபி முத்ரா சவுத் மூலம் கருத்துருவ...
கவுதம் மேனனின் புதிய படைப்பில் யோகி பாபு ?

கவுதம் மேனனின் புதிய படைப்பில் யோகி பாபு ?

News
கவுதம் மேனனின் புதிய படைப்பில் யோகி பாபு ? என்னவாக இருக்கும் ரசிகர்கள் ஆவல் ? "வாரணம் ஆயிரம்", "காக்க காக்க", "மின்னலே", "விண்ணைத்தாண்டி வருவாயா", "வேட்டையாடு விளையாடு" போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, தனது அடுத்த படைப்பு குறித்து மறைமுகமாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார். மம்முட்டியுடன் கௌதம் மேனன் இணையும், அவரது முதல் மலையாளத் திரைப்படம் தாமதமாவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் சோஷியல் மீடியா இன்புளுயன்சர் பால் டப்பா ஆகிய மூவரும், ஒரு படப்பிடிப்பு தளத்தில் ...
யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு, ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது. யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது. யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலைய...
ஆணவக்கொலையை மையப்படுத்தி உருவாகும் ‘கங்கா தேவி’!

ஆணவக்கொலையை மையப்படுத்தி உருவாகும் ‘கங்கா தேவி’!

News
'குமரன் சினிமாஸ் தயாரிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி' குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் 'கங்கா தேவி'. ராகவா லாரன்ஸின் சீடரும் 'சண்டிமுனி' படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடிக்கிறார். 'கருமேகங்கள் கலைகின்றன', 'வரலாம் வா' உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'அட்டு' படத்தில் நடித்த ரிஷி ரித்விக் கதாநாயகனாக நடிக்கிறார். நளினி முக்கிய வேடத்தில் நடிக்க ஆர்த்தி, கணேஷ் இருவருமே இந்த படத்தில் முதன்முறையாக கணவன் மனைவியாக இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூப்பர் சுப்பராயன், மொட்ட ராஜேந்திரன், மற்றும் ...
கவுண்டமணி யோகி பாபு இணைந்து நடிக்கும் “ஒத்த ஓட்டு முத்தையா”!

கவுண்டமணி யோகி பாபு இணைந்து நடிக்கும் “ஒத்த ஓட்டு முத்தையா”!

News
Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் "ஒத்த ஓட்டு முத்தையா" திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்தது.. கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார் கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த "ஒத்த ஓட்டு முத்தையா" படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது..பூசணிக்காய் உடைக்கப் பட்டது.. கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..'மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்து அ...