Tag: actorajith
அஜித்தின் அடுத்த படம்…
விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் . ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் முக்கியம் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.
அவர் மேலும் கூறியதாவது அஜித் குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது. தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அவர் எதேச்சையாக அஜித் குமார...
அஜீத்திடம் எளிமையை கற்றுக் கொண்டேன் – ரோபோ ஷங்கர்
வெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற "விஸ்வாசம்" படத்தில் நாயகன் அஜீத் குமாரின் வலது கரமாக வந்து "மெரிட்டு" என்கிற பாத்திரத்தில் ஜொலித்த ரோபோ ஷங்கர் அஜித் குமாரை பற்றி பேசும் போது சிலாகித்து கொள்கிறார்.
"அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன்.
என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார். ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார். நான் விஸ்வாஸம் வெளிவரும் போது மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம்.இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் ம...



