அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் 24H சீரிஸூக்கான கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதுபற்றி, அஜித்குமார் ரேசிங் குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது.
அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ள அஜித்குமார் இதில் உள்ள பலவிதமான சவால்களையும் கருத்தில் கொண்டு, அணியினரின் நலனை முன்னுரிமை படுத்தி இருக்கிறார். பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு குறித்தான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார்.
பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, வரவிருக்கும் துபாய் 24H சீரிஸில், அஜித்குமார் ரேசிங்கிற்கு வாகனம் ஓட்டுவதில் இருந்து பின்வாங்குவது என்ற கடினமான ஆனால் தன்னலமற்ற முடிவை அஜித்குமார் எடுத்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதையும் தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிம...