Tuesday, September 22

Tag: actormadhavan

ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்!

ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்!

News
தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌ தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது. நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜி. டி. நாயுடுவின்...
மாதவன் நடிக்கும் “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்”

மாதவன் நடிக்கும் “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்”

News
இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் R மாதவன், முதல் முறையாக இயக்குநராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நம்பமுடியாத வாழ்வினை வாழ்ந்த அறிவியலாளரின் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகர் R மாதவன். “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் 1 ஆம் தேதி ஜூலை 2022 உலகம் முழுதும் வெளியாகிறது. இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , ...
இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் மாதவன்

இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் மாதவன்

News
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘ராக்கெட்டரி’ திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் சில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் தற்போது விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் மாதவனே ஏற்றுள்ளார். இந்த தகவலை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் மாதவன் ‘ராக்கெட்டரி’ படத்திற்கு லோகேஷனை தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார...