Saturday, October 3

Tag: @ActorVemal @shamna_kasim @ashnazaveri #Poorna #Anandaraj #Singampuli #KRajan @Promounamravi1 @Pro_Bhuvan

அஜித், ஜெய் வரிசையில் விமல்?

அஜித், ஜெய் வரிசையில் விமல்?

News
ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது எப்போதும் கொண்டாட்டத்துக்குரிய ஒன்றாகத்தான் அநேகமாக இருக்கும். ஆனால் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா அவ்வாறு அமையவில்லை. காரணம் கஜா புயலின் கோரத்தாண்டவம்... “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படத்தின் நாயகன் விமல் பேசத்துவங்கும்போதே இந்த விழாவுக்கு நான் வரவில்லை என்றுதான் சொன்னேன் என்று ஆரம்பித்ததுமே அஜித், ஜெய் வரிசையில் அடுத்த ஆளா என்றுதான் தோன்றியது. தொடர்ந்து பேசிய விமல் அதற்கான காரணத்தைச் சொன்னபோது அரங்கமே சற்று இறுக்கமானது. விழாவுக்கு நான் வரவில்லை என்று சொன்னதற்கு காரணம். கஜா புயலால் சின்னா பின்னமான டெல்டா பகுதியில் நான் இருந்ததுதான். என் சொந்த ஊரையும் சுற்றுப் பகுதியிலுள்ள ஊர்களையும் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டது. படப்பிடிப்பில் இருவந்தபோது அம்மா அப்பாவுடன் போனில்கூட பேசமுடியவில்லை. அந்த காலத...