Tuesday, October 20

Tag: ActorVemal

விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’!

விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’!

News
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது! வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும். ஆக்‌ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 'ஓம் காளி ஜெய் காளி' அமைந்துள்ளது. குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஓம் காளி ஜெய் காளி' ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாக...