தெலுங்கு ஆந்தாலஜி “பிட்ட கதலு” படத்தில் அஷிமா நர்வால்!
தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார். “கொலைகாரன்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இவர், “பிட்ட கதலு” ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘பிங்கி’ எனும் பகுதியில் இந்து கதாப்பாத்திரத்தில் மிக அருமையான நடிப்பை வழங்கி, அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இது குறித்து நடிகை அஷிமா நர்வால் கூறியதாவது...
தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள், பலவித காரணங்களால், என் வாழ்வின் சிறப்பு மிக்க தருணமாகியுள்ளது. முதல் காரணம் Netflix போன்ற உலகளாவிய மிகப்பெரும் புகழ் கொண்ட நிறுவனத்தின், முதல் தென்னிந்திய ஆந்தாலஜி படத்தில் பங்கு கொண்டதாகும். அடுத்தது தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளான சங்கல்ப் ரெட்டி, நடி...
