தெலுங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன் ? மைக்கேல் பட நாயகி தீப்ஷிகா விளக்கம்!
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேபை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக திவ்யான்ஷா கவுசிக், வரலட்சுமி ஆகியோருடன் கவனிக்கத்தக்க வேடத்தில் நடித்துள்ளார் நடிகை தீப்ஷிகா. இந்த படத்தில் கௌதம் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறு வயது சந்தீப் கிஷனின் தாயாக, கிளப்பில் பாடும் பாடகியாக, ஒரு அழகு பொம்மை போல் காட்சியளித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார் தீப்ஷிகா.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து, படித்த, நம்ம ஊர் பொண்ணுதான் தீப்ஷிகா. ஆனால் தமிழில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கில் இருந்து வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. அந்த வகையில் தெலுங்கிலேயே கிட...
