டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவிருக்கும் ஹன்சிகாவின் திருமண வைபவம்!
'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்' பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது
சென்னை, ஜனவரி 18, 2023: இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார் என்ற செய்தி வெளியான போது பல இதயங்கள் உடைந்து போனது. ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளாக அறியப்பட்டது.
இப்போது, முதன்முறையாக, விழாகோலமாக இருந்த அந்த நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பின்னால் நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார்கள்.ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோ-வான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஷோ, நடிகை ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை த...

