Friday, October 23

Tag: actress sakshi-agarwal

பாலிவுட் படங்களிலும் பாதம் பதிக்கும்சாக்‌ஷி அகர்வால்!

பாலிவுட் படங்களிலும் பாதம் பதிக்கும்சாக்‌ஷி அகர்வால்!

News
தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு, இந்த தீபாவளி பான் இந்திய தீபாவளியாக அமைந்திருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவருக்கு இந்த தீபாவளி மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கிறது. பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்‌ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்‌ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிரா...
வித்தியாசமான வேடங்களையே விரும்பி ஏற்கும் சாக்‌ஷி அகர்வால்!

வித்தியாசமான வேடங்களையே விரும்பி ஏற்கும் சாக்‌ஷி அகர்வால்!

News
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் "நான் கடவுள் இல்லை" படத்தில் முழு நீள ஆக்‌ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டினார். அதே போல் தற்போது நடிகர் பிரபுதேவா கதாநாயகானாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பஹீரா படத்தில் அவரது அபாரமான நடிப்பு திரையுலகத்தினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ...
நெல்லைத் தமிழில் பேசி அசத்தும் சாக்‌ஷி அகர்வால்!

நெல்லைத் தமிழில் பேசி அசத்தும் சாக்‌ஷி அகர்வால்!

News
ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்‌ஷி அகர்வால் ஒன் ஆப் த ஹீரோயின். ஏற்கெனவே இவர் மலையாளத்தில் பிஜுமேனன் ஜோடியாக நடித்த படம் இவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. கூடுதல் செய்தியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்த...