ஸ்ருதி ஹாசன் துவக்கும் யூ ட்யூப் சேனல்!
நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள புதிய தளத்தில் காலடி வைக்கிறார்.
ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது சமூக ஊடக ரசிகர்களுக்காக செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார்.
ஸ்ருதி, பிரிட்டைன் முழுவதும் இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப் பயணம் செய்துள்ளார். தனது முதல் ஆல்பத்துக்கான வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் உருவாக்கிய படைப்புகளையும், உலகம் முழுவதும் அவர் மேடையேற்றிய இசை நிகழ்ச்சிகளிலிலிருந்து, பார்த்திராத காணொலிகளையும் வெளியிடவ...

