டாக்டர். சிவராஜ்குமாரின் புதிய மெகா பட்ஜெட் திரைப்படம்!
'மாஸ் மகாராஜா' டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைகிறார்!
கன்னடத் திரையுலகின் பெருமையான டாக்டர். சிவராஜ்குமார் தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது திரைப்படங்கள் தற்போது தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக அரிதாக, நடிகர்களை அவர்கள் நடிப்பிற்காக மட்டுமல்லாது அவர்களின் இயல்புக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். டாக்டர். சிவராஜ்குமார் அத்தகைய நடிகர்களில் ஒருவர்.
அவர் #MB என்ற மெகா பட்ஜெட் படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளார். மும...
