புரட்சி வாலிபனாக அதர்வாமுரளி நடித்த “அட்ரஸ்” படபிடிப்பு நிறைவு!
புரட்சி வாலிபனாக முக்கிய பாத்திரத்தில் அதர்வாமுரளி நடித்த “அட்ரஸ்”
படபிடிப்பு முடிவடைந்தது!
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் படம்!
“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”,
“வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்” படத்தை இயக்கிவருகிறார்.
இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவரும் இதன் படபிடிப்பு, சமீபத்தில் நடந்தது. அத்துடன் படபிடிப்பு முடிவடைந்தது.
ராஜாமோகன், கதை திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார்.
இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்பு...
