Tag: adho andha paravai pola
:தற்காப்பு கலை எனக்கு தைரியத்தை கொடுத்தது” – அமலாபால்
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது, ‘
பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதோ அந்த பறவை போல படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது. இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மனதார வரவ...

