மோகன்லால் வெளியிட்ட “அடிபொலி” பாடல்!
'தியா' பட புகழ் குஷி ரவி கலக்கும் “அடிபொலி” பாடல்!
Think originals நிறுவனம் தொடர்ந்து திரைப்பட இசை அல்லாத, வெற்றிகரமான சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.அந்த வகையில் ஓணம் திருநாள் கொண்டாட்டமாக, மலையாளத் திரைத்துறையின் பன்முக திறமை கொண்ட நடிகர் இயக்குநர் வினித் சீனிவாசன் மற்றும் சிவாங்கி கிரிஷ் குரலில் அற்புதமான “அடிபொலி” பாடலை வெளியிட்டுள்ளது. மலையாளத்திரையின் உட்ச நடசத்திரமான மோகன்லால் அவர்கள், இப்பாடலின் இணைய ஸ்ட்ரீமிங் லிங்கை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நொடியில், இப்பாடல் இணையத்தில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான நாள் முதல் இசை ரசிகர்களின் நெஞ்சங்களை வென்று, பெரு வெற்றியை பெற்றுள்ளது. இந்த பாடல் தற்போது YouTube இல் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, YouTube Trending No1 உள்ளது. மேலும் #Adipoli இணையத்தில் வைரலாகி வருகி...
