நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்த ஆறு ஆச்சரியம் தரும் தருணங்கள்!
“கூடசாரி” திரைப்படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, அதன் அடுத்த பாகமான, ஸ்பை திரில்லர் #G2 லிருந்து ஆறு ஆச்சரியம் தரும் தருணங்களை, நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்திருக்கிறார்!
“கூடசாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில் , G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் சர்வதேச தர உருவாக்கத்தையும் மற்றும் நுட்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. G2 இன் இந்த தருணங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய தளத்திலும் தனித்து நிற்கும், ஒரு ஸ்பை த்ரில்லரை வழங்குவதற்கா...
