தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள் – நடிகர் சூர்யா!
தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், " மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தினால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தேறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக்கொள்கை வரைவில், 3ஆம் வகுப்பு முதல் நுழைவு தேர்வு, கல்வி தேர்வு என தேர்வுகள் வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். சரியான சமமான கல்வி இல்லாமல் எப்படி கல்வி தேர்வுகள் வைக்க முடியும்? இந்த புதிய கல்விக்கொள்கை என்பது முப்பது கோடி மாணவர்களின் வாழ்க்கை பற்றியது. இந்த கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்கள் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால் மட்டுமே மாற்ற முடியும் என்கின்ற போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் இது குறித்து அதிக கவனம் செல...
