அகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, கலை என கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன்பெற்ற மாணவர்கள் என அகரம் விதைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 3,000 மாணவர்களின் கல்லூரிக் கனவை ‘விதைத் திட்டம்' மூலமாக நிறைவேற்றி இருக்கிறோம். இத்தனை தொலைவை கடந்துவர துணை நின்ற அறம்சார் மனிதர்கள், சமூக நலன்சார் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து நினைவுகள் சூழ, அகரம் பத்தாண்டுகள் 'தடம் விதைகளின் பயணம்' நிகழ்வு 2020...
