சந்தானம் நடிக்கும் “ஏஜெண்ட் கண்ணாயிரம்” !
Labrynth Films தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைத்துறையில் “வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தின் மூலம், தனது பயணத்தை துவங்கியது. தற்போது இயக்குநர் மனோஜ் பீடா இயக்கத்தில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரித்துள்ளது.
தென்னிந்திய திரைத்துறையில் இளம் தலைமுறையில், அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஆகியவற்றை வெளியிட்டார். ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
நடிகர் சந்தானம் மற்றும் ரியா சுமன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், அவர்களுடன் இணைந்து, ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், E ராமதாஸ், அருவி மதன், ஆத...
