மாநில எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான படமாக உருவாகும்“அஹம் பிரம்மாஸ்மி” !
ராக்கிங்க் ஸ்டார் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அதிரடியான அவதாரத்தில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க வருகிறார். “அஹம் பிரம்மாஸ்மி” என தலைப்பிடப்பட்டுள்ள அவரது புதிய படம், அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.
இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. மெகா பவர் ஸ்டார் ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க, அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க படப்பிடிப்பு துவக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமைகளான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார். விருந்தினர்கள் அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.
முழு இந்திய த...

