நடிகர் சூர்யா வெளியிட்ட ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் தீரஜின், ஃபேண்டஸி காமெடி, என்டர்டெயினரான ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா வெளியிட்டார்!
சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களை, ரசிகர்கள் கொண்டாடத் தவறியதேயில்லை. இந்தப்புத்தாண்டு தமிழ் ரசிகர்களுக்கு, ஏற்கனவே இதுபோன்ற அற்புதமான திரைப்படங்களை வழங்கி வரும் நிலையில், நடிகர் தீரஜ் நடிப்பில் அடுத்ததாக “டபுள் டக்கர்” திரைப்படம், இந்த வரிசையில் இணைகிறது. ஃபேண்டஸி அம்சங்களுடன் வயிறு வலிக்க சிரித்து மகிழும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக, இப்படத்தினை அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார்.
முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ஒட்டுமொத்த கு...
