தரமான பார்ட்டி குத்து பாட்டு “ஐத்தலக்கா”!
"ஐத்தலக்கா" பாடலுக்காக மீண்டும் இணையும் அனிருத் மற்றும் கணேஷ் சந்திரசேகரன்!
பிரபல பாடகரும் ராக்ஸ்டார் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் Video Albumற்காக மீண்டும் ஒரு பாடலை தனக்காகப் பாடித் தந்தில் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் உற்சாகமடைந்துள்ளார். கணேஷும் அனிருத்தும் முன்பு நடிகர் விவேக்கின் எழுமின் படத்தில் இணைந்து பணியாற்றினர், இது கணேஷின் முதல் படமாகும். Album ஃபர்ஸ்ட் லுக்கை குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
"ஐத்தலக்கா" ஒரு தரமான பார்ட்டி குத்து பாட்டு, இப்பாடலுக்கு தமிழ் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடனமாடுகிறார். அனிருத்துடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி கேட்டதற்கு, அனி எளிமையானவர் மற்றும் எளிதில் அணுகக்கூடிய நபர் என்று கணேஷ் கூறினார். இந்தப் பாடலைப் பற்றி எனக்கு யோசனை தோன்றியபோது, நீங்கள் பாடினால் அருமையாக இருக்கும் என்று அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். சிறிதும் யோசிக்காமல் அ...
