‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
*மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையான 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது*
*இசைஞானி இளையராஜா இசையில், செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்*
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்க பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள...
