Friday, October 23

Tag: akilan

“வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்த்த இளம் நாயகன் அகிலன் SPR!

“வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்த்த இளம் நாயகன் அகிலன் SPR!

News
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள “வீரமே வாகை சூடும்” படத்தில், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம் நாயகன் அகிலன். படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இவரின் சிறப்பான நடிப்பு, பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் து.பா. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக பிப்ரவரி 4 வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் விஷாலின் தங்கையின் காதலனாக, விஷாலுடன் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் நடிகர் அகிலன் SPR. படம் முழுக்க வரும் இப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. இளம் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அகிலன் தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பு திறமையால், அனைவரையும் கவர்ந்துள்ளார். ...