அம்மா மூவி அசோசியேஷன் அடுத்த கட்ட உதவி!
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து நாளையுடன் நாற்பது நாட்கள் நிறைவடைய உள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்க இந்திய அரசாங்கம் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் திரைப்பட துறை படப்பிடிப்பு, போஸ்ட் புரெடெக்க்ஷன், தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடல் அனைத்தும் கடந்த 45 நாட்களாக முடக்கிவைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக திரைப்படத்துறை வேலைவாய்ப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் வருவாய் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்கு தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள அம்மா மூவி அசோசியேசன் தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும...
