ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஏஏஏ சினிமாஸ்’ தொடக்க விழா!
மிகப் பிரமாண்டமான முறையில் தனது ’ஏஏஏ சினிமாஸ்'ஸை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் திறந்து வைத்தார். அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து 'ஏஏஏ சினிமாஸ்'ஸை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது தங்களுக்குப் பிடித்த நட்சத்திரமான அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
சுனில் நரங் கூறுகையில், ''ஏஏஏ சினிமாஸுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு மூன்று லட்சம் சதுர அடி. மூன்றாவது தளத்தில் உணவு விடுதி 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ஏஏஏ சினிமாஸின் நான்காவது மாடியில் ஐந்து திரைகளுடன் கூடிய திரையரங்கு உள்ளது. திரை எண் 2 இல் LED திரை உள்ளது. தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ மட்டுமே. இதற்கு புரொஜக்ஷ...
