திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “
8 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021அன்று சென்னை PVR சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது.உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகி இருந்தது . அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட "அமலா" திரைப்படமும் தேர்வாகி இருந்தது.
இயக்குனர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான ஸ்ரீகாந்த், "ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ்" புகழ் அப்பாணி சரத் ,அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார் .
இசையமைப்பாளர் லிஜின் பொம்மினோ இ...

