Wednesday, October 28

Tag: AmbaraaThooni

அம்பறாத்தூணி சிறுகதைகள்

அம்பறாத்தூணி சிறுகதைகள்

News
750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் தெய்வத்தை வழிபடும் ஒரு காட்சி. மன்னர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதை கற்பனையாக எழுதுவதை விட மாவீரர் பூலித்தேவனே பாடியதாக வரலாற்றில் ஏதேனும் பாடல் உண்டா என்று ஆய்வாளர்களைத் தொடர்புகொண்டு பல்வேறு தரவுகளில் தேடினேன். அப்படி ஒரு பாடல் கிடைத்தது. அவரே பாடிய அந்தப் பாடலைத்தான் அந்தச் சிறுகதையில் பயன்படுத்தியிருக்கிறேன். வேற்றுமொழி கார்டூன் தொடர்களுக்கு தமிழில் குரல் கொடுப்பவர்களுக்கான குரல் தேர்வுக்கு என்னென்ன தேர்வுமுறைகள் கையாளப்படுகின்றன என தேடியபோது மும்பையில் நடந்த ஒரு வினோதமான தேர்வுமுறை என்னை ஈர்த்தது. அது ஒரு சிறுகதையாகியிருக்கிறது. 1876ஆம் ஆண்டு சென்னை மாகாண பெரும் பஞ்சத்தின் போது நிகழும் என் சிறுகதையில் அந்த பஞ்சத்தை அன்று புகைப்படம் எடுத்த பிரிட்டிஷ் ராணுவ புகைப்படக்கலைஞ...