Friday, October 23

Tag: ameera

சீமான் -ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும்  “அமீரா”

சீமான் -ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் “அமீரா”

News
தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் "அமீரா".  செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா "அமீரா" என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..    சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.    பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன்  ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..   அமீரா என்றால் இளவரசி என அர்த்தம்.    இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா ...
10 லட்சம் வாங்கித் தருகிறேன் இந்தப் பாடலை எனக்குக் கொடுங்கள் கவிஞர் வைரமுத்துவிடம் சீனுராமசாமி கோரிக்கை

10 லட்சம் வாங்கித் தருகிறேன் இந்தப் பாடலை எனக்குக் கொடுங்கள் கவிஞர் வைரமுத்துவிடம் சீனுராமசாமி கோரிக்கை

News
சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9-ம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்த நேரத்தில் தொலைபேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அந்தப் பாடலைப் படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு ஆஹா என்ற சீனுராமசாமி, இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம். இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக்கு ம...