‘கல்கி 2898 AD’ படத்தில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப்பச்சன் தோற்றம்!
'கல்கி 2898 AD' படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது.
நெமாவாரிலுள்ள 'நர்மதா காட்' எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது.
இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு 'கல்கி 2898 AD'. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் தருணத்தில், 'கல்கி 2898 AD' படத்தில் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு, மத்திய பிரதேச மாநிலத்தின் புனித நகரமான நெமாவார் தொன்மையான ...

