ரசிகர்களை கிறங்கடிக்க வரும் “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்!
OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், 'அம்முச்சி' என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு அம்முச்சி சீசன் 2 உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது.
கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட கதை மாந்தர்கள், குடும்பங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான மோதல்கள் ஆகிய கதைகருக்களின் வழியாக இந்தக்...
