Sunday, September 20

Tag: AMRO Cineema

டிஜிட்டல் கந்து  வட்டியைத் தோலுரித்துக் காட்டும் முதல் தமிழ்த் திரைப்படம்  ‘RAT’!

டிஜிட்டல் கந்து வட்டியைத் தோலுரித்துக் காட்டும் முதல் தமிழ்த் திரைப்படம் ‘RAT’!

News
பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்ரோ கிங்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ஆம்ரோ சினிமா என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது. அதன் முதல் படைப்பாக டிஜிட்டல் கந்துவட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் பொருட்செலவில் "RAT" என்கிற படம் உருவாகிறது. விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன.  தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள்.  அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் - எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும். இது உண்மையில...