தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி?
சென்னை: தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
" டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசுக்கு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாகவே உள்ளோம். என்னை போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கின்றனர்.
சுகாதாரத் துறை ஊழியர்கள் சோர்வாக உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சோர்வாக இருக்கிறார்கள்....
