கோடியில் ஒருவன்’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுக்குக் குவியும் பாராட்டுகள்!
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் 'ஆள்', 'மெட்ரோ ' படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்கியுள்ள படம் 'கோடியில் ஒருவன்' . இப் படத்திற்குத் திரை ரசிகர்கள் மட்டுமல்ல கற்றவர்கள் மூத்தவர்கள் குடும்பத்துப் பெரியவர்கள் மத்தியிலும்கூட நல்ல வரவேற்பு உள்ளது. ஏராளமானவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இயக்குநரைப் பாராட்டுகிறார்கள்.
அவர்களின் கருத்துக்கள் வழக்கமான சினிமா பார்த்த ரசிகர்களின் கருத்துகளாக இல்லாமல் வேறு விதமாகவும் ஆழமாக இருக்கிறது என்று இயக்குனர் வியக்கிறார்.அப்படி ஒருவர் பேசும்போது கூறுகிறார்,
"ஒரு மனிதனுக்கு விடுதலை என்பது கல்வியால்தான் வரும். ஒரு மனிதனுக்கு விடுதலை தருகிற அந்தக் கல்வியை முதலில் அவனைப் பெற்றெடுத்த தாய் மூலம் கற்கிறான். அந்தக் தாய்தான் ஒரு மனிதனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கற்றுக் கொடுக்கிறாள்.அவளிடம் கற்றதை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவன் மேலும் கற்கிறா...

