“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா !
கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். 40 க்குமேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரகியுள்ளது. படகுழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…
இந்தப்படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வரவர தமிழ் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை. ஆனந்தம் விளையாடும் வீடு தலைப்பை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தா பெரியசாமி அற்புதமான கதாசிரியன். நல்ல இயக...
